#BREAKING தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு

 
s

தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில், கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்படுகின்றன. 

வாக்களிக்கும் நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் ECI-க்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால்,கூடுதல் நேரம் நீட்டிப்பு வழங்கப்படாது. மாறாக, 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடி மையத்திற்குள் வரும் அனைவருக்கும் வாக்களிக்க உரிமை உண்டு. ஆனால் கூடுதலாக நேரம் ஒதுக்கீடு வழங்கவில்லை. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.