மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறைவு
Updated: Oct 6, 2026, 18:24 IST1791291276221
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அசம்பாவிதமின்றி நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாசல்கள் மூடப்பட்டன. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ல் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

