தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி 84.56% வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி, 234 தொகுதிகளிலும் சராசரியாக 84.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி 6 மணி வரை சுமூகமாக நடைபெற்றது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.இந்த ஓட்டுப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது. 5 மணி நிலவரப்படி, 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்த ஓட்டு சதவீதம் 84.29%. கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் 20 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளன. மொத்தமாக 4.63 கோடி வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

