இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத வாக்காளர்கள்- 15% குறைந்த வாக்குப்பதிவு

 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தபால் வாக்கு முடிவுகள்

கடந்த  சட்டமன்ற தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் சராசரியாக 10 % முதல் 15% அளவு வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தல் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. மதுராந்தகம் - 85.90% (2026 பொது தேர்தல் - 93.22%), தாராபுரம் - 80.31% (2026 பொது தேர்தல் - 89.90%). தட்டாஞ்சாவடி தொகுதி (புதுச்சேரி)- 80.81% (2026 பொது தேர்தல் - 87.10%). போன முறை மாற்றத்திற்கான வாக்குகளை என அதிகமாக செலுத்த வந்த மக்கள், தற்பொழுது செலுத்தவில்லையா எனக் கேள்வி எழுகிறது. ஏனென்றால் வேட்பாளர்கள் மேல் இருந்த அதிருப்தி என்று களத்தில் இருந்து கூறுகிறார்கள். அதாவது கடந்த  சட்டமன்ற தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில்   சராசரியாக 10 % முதல் 15% அளவு வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.