"ஓட்டுக்கு பணம் வேண்டும்..”- வேட்பாளர் வீட்டை முற்றுகையிட்ட வாக்காளர்கள்

 
s

பாளையங்கோட்டையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், அது தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இன்னும் 2 நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு பெட்டிகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காலை முதல் நெல்லை தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கியில் இருந்து வாக்கு பெட்டிகளை அலுவலர்கள் முறையாக பரிசோதனை செய்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் லாரிகள் மூலமாக அனுப்பி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தமாக 12 லட்சத்து 63 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளனர். 1678 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 8343 அலுவலர்கள் பணியாற்ற இருக்கின்றனர். 298 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு இருக்கிறது அதற்கு பலத்தை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாளையங்கோட்டையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், அது தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் கிடைக்கவில்லை எனக்கூறி வாக்காளர்கள் சிலர் வேட்பாளரின் வீட்டை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.