#BREAKING : தமிழ்நாட்டில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..!!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.
வரலாறு காணாத வாக்குப்பதிவு!
234 தொகுதிகளிலும் பகல் 1 மணி வரை 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97% பேர் வாக்களித்துள்ளனர். சென்னை - 54.56%, கோவை - 58.24%, தருமபுரி - 59.02%, ஈரோடு - 61.79%, மதுரை - 54.75%, கரூர் 60.77%, சேலம் - 61.42%, - நாமக்கல் - 62.51%, நீலகிரி 50.42% பேர் ஓட்டளித்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை எந்தத் தேர்தலிலும் பகல் 1 மணி வரை இவ்வளவு வாக்குகள் பதிவானதில்லை.

