குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அட்டைகள்.. கடலூர் அருகே பரபரப்பு..!!

 
குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அட்டைகள்.. கடலூர் அருகே பரபரப்பு..!! குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அட்டைகள்.. கடலூர் அருகே பரபரப்பு..!!

கடலூர் மாவட்ட மாநகராட்சி குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அட்டைகள்.. கடலூர் அருகே பரபரப்பு..!!

கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் தெருவில் கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக  குப்பை சேகரிக்கும்  வண்டிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்..  அந்தவகையில் இன்று காலையில் வழக்கம் போல் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை எடுப்பதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்றபோது ,  அந்த குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்துள்ளன.  

குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அட்டைகள்.. கடலூர் அருகே பரபரப்பு..!!

அங்கு கிடந்த அனைத்து வாக்காள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுடையது என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மகேஷ், வாக்காளர் அட்டைகள் எப்படி குப்பை தொட்டிக்கு வந்தது. இதனை யார் இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறார். கடலூரில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பை வண்டியில் கிடந்தது சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது