தவெக மாநாட்டுக்கு 150 வாகனங்களில் புறப்பட்ட தொண்டர்கள்- நாகையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் புறப்பட்ட தொண்டர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் முகப்பு பகுதியில் கட்சியினுடைய தலைவர் விஜய் ஏற்ற உள்ள பிரமாண்ட கொடி கம்பம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டின் மேடையில் இருந்து வலது புறத்தில் 50 அடி உயரத்தில் பெரியார் , அம்பேத்கர், காமராஜர், விஜய் கட் அவுட்டர் உடன் தற்போது வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்டர்களும், மற்றும் மாநாட்டு மேடையில் இருந்து இடது புறத்தில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், விஜய் கட் அவூட்டரும் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நுழைவு வாயிலில் அரசு தலைமை செயலகம் ஜெயின் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு அதில் மையப்பகுதியில் விஜய் கைகூப்பி வணங்கும் படமும் அவருக்கு இரு புறமுறம் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் , வேலு நாச்சியார் படம் இடம்பெற்றுள்ளன.
தலைவா @actorvijay இது உங்களுக்காக, நாகை இதுவரை காணாதது. திமுக, அதிமுக நாகையில் இதுவரை செய்யாததை நாங்கள் இன்று உங்களுக்காக செய்த நிறைவோடு வந்து கொண்டிருக்கிறோம் தலைவா! நாகை யின் வரலாற்றில் த.வெ.க இன்று இடம்பெற்றுவிட்டது #தமிழகவெற்றிக்கழகம்#TVKMaanadu pic.twitter.com/Vm6wmmwRY9
— கோடீஸ்வரன் (@KodeeswaRaja_) October 27, 2024
இந்நிலையில் தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் இருந்து தொண்டர்கள் புறப்பட்டனர். நாகை-நாகூர் சாலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்களால், நாகை புதிய பேருந்து நிலையம் முதல் நாகூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


