வ.உ. சிதம்பரனார் நினைவு நாள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் புகழாரம்!!

 
tn

வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தள பக்கத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த தென்னிந்திய புரட்சியாளர், நாட்டில் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி இந்தியர்களை தலைநிமிர செய்த தேசிய பற்றாளர், நம் தாய் நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும் போராடி சிறைச் சென்ற செக்கிழுத்த செம்மல் , #கப்பலோட்டியதமிழர்  தியாகி வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக, ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு உள்ளாகித் தம், உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்த தியாகி ‘கப்பலோட்டிய தமிழர்’ திரு. வ. உ. சிதம்பரம் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 

nullநாட்டுக்கும், மொழிக்கும் நற்பணிகள் பலவற்றைச் செய்த ‘செக்கிழுத்தச் செம்மல்’ திரு. சிதம்பரனாரின் பெயரும், புகழும் என்றும் இப்புவியில் நிலைத்திருக்கும்.என்றுபதிவிட்டுள்ளார்.