செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் - ஓபிஎஸ், கமல் ஹாசன் ட்வீட்!!

 
tnn

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் செய்த தியாகங்களை போற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் , தாய் நாட்டையும் தாய்த் தமிழையும் தன்னிரு கண்களாகக் கொண்டவர் வ.உ.சிதம்பரனார். ஆதிக்கத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற கப்பலோட்டிய தமிழரின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அத்துடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் என்றும் செக்கிழுத்த செம்மல் என்றும் வரலாறு பேசும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட தனி பெரும் தலைவர், தியாகி வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் தேசத் தொண்டுகளையும், வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்!
 என்று கூறியுள்ளார்.