ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் - ஈபிஎஸ்

 
ep

 வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

வ. உ. சி  இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். ஆங்கிலேயகப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. ஆங்கிலேய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.
 


இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்தி, தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்து ஆங்கிலேயர்களுக்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை சிம்மசொப்பனமாக திகழ்ந்த கப்பலோட்டியதமிழன் போற்றுதலுக்குரிய வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.