செக்கிழுத்த செம்மல் வஉசி பிறந்தநாள் - அண்ணாமலை ட்வீட்

 
Annamalai

செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று. 

tn

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக இருந்தாலும், முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரது சுதேசிப் பணியின் ஒரு பகுதியாக, ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவி, கப்பலோட்டிய தமிழர் என்ற புகழ் பெற்றவர். 


நாட்டு விடுதலைக்காகப் போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் கடினமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டும், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாத செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.