கருமுத்து கண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - சசிகலா

 
sasikala

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்வித் தொண்டாற்றியவரும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தக்காருமான கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், வி.கே.சசிலகாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:  மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கருமுத்து கண்ணன் அவர்கள் அனைவருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர். தொழில்துறை, கல்வித்துறை, ஆன்மிகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிறந்து விளங்கியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.