சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் இன்று - தினகரன் ட்வீட்!!

 
ttv dhinakaran

விவேகானந்தர் பிறந்தநாளான இன்று இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திட உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியான இன்று  தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கோல்கத்தாவில் பிறந்தார்.  சுவாமி விவேகானந்தர் சிறு வயதிலேயே இந்து சமயக் கொள்கைகளில் அதிக ஈடுபாடும்,  பகுத்தறிவும்  பெற்ற சிந்தனைவாதியாகவும் ,தத்துவமும், புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராகவும் காணப்பட்டார். அவரது வாழ்க்கை முறையும், வார்த்தைகளும் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது. நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் இளைஞர்கள் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர். இதனால்  1984ஆம் ஆண்டு மத்திய அரசு  விவேகானந்தரின் பிறந்தநாளினை தேசிய நாளாக அறிவித்தது . இதைத்தொடர்ந்து 1985ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இத்தினம் இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மனிதநேயத்தையும், தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் முறையையும் மக்களுக்கு எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று! ... “உற்காசமாக இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி” என அவர் அறிவுறுத்திய வழியிலேயே, மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களை மகிழ்ச்சியாக வாழவைத்திடவும், இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.என்று பதிவிட்டுள்ளார்.