சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

 
Protest

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்திய சாலைமறியல் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

central bus stand

ரயில் நிலையங்களுக்கே உரித்தான மணி சத்தத்துடன் கூடிய தமிழ், ஆங்கில, இந்தி அறிவிப்புகள் தான் ரயிலில் பயணிக்கும் அனைத்து தரப்பு மக்களின் நம்பகத்தகுந்த வழிகாட்டியாக உள்ளது. ரயில் புறப்படும் நேரம், ரயில் வந்து சேரும் நேரம், நடைமேடை எண், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்,  தாமதமாகும் ரயில் விவரம் என அனைத்தையும் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்தில் எந்த பகுதியில் இருந்தும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒலி மாசை குறைப்பதற்காக ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் வெளியிடப்படுவது சோதனை அடிப்படையில் நிறுத்தப்பட்டது. 

இதனால் அவசரமாக வெளியூருக்கு செல்ல வரும் பொது மக்களும், படிக்கத்தெரியாதவர்கள் மற்றும் செவித்திறன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சைலன்ட் ஸ்டேஷன் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.