"டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி தரப்படும்” - ஏசிடிசி நிறுவனம் அறிவிப்பு

 
rn

பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் அந்த தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று 'மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி' ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ar-rahman-23

சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவதிப்பட்டதுடன்,  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பொறுப்பேற்று மன்னிப்பு கோரினார்.  இந்த சூழலில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் சிஇஓ ஹேமந்த் ராஜா,  பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் அந்த டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில்,  இசை நிகழ்ச்சியில் சில அசவுகரியங்கள் நடந்துள்ளன.  டிக்கெட் வாங்கியும் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  மக்கள் ரஹ்மான் சாரின் இசையை கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.  இந்த நிகழ்ச்சியில் நடந்த  அசவுகரியங்களுக்கு எங்கள் ஏசிடிசி நிறுவனமே முழு பொறுப்பு.  இதில் ரஹ்மானின் பங்கு மேடையில் இசை நிகழ்ச்சியை நடத்தியது மட்டுமே . அதை அவர் மிகச் சிறப்பாகவே செய்து இருந்தார். அவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடந்த அசௌகரியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  இதனால் அவரை மையப்படுத்தி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம்.  டிக்கெட் வாங்கி உள்ளே நுழைய முடியாதவர்களுக்கான டிக்கெட் தொகை கண்டிப்பாக திருப்பி வழங்கப்படும்.  அது 500 ரூபாயாக இருந்தாலும் செய்து சரி , ஐம்பதாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி என்று தெரிவித்துள்ளார்.