விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கர் விருது அறிவிப்பு

 
c c

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு இந்தாண்டிற்கான பால சாகித்ய புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Image


எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு இந்தாண்டிற்கான பால சாகித்ய புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒற்றை சிறகு ஓவியா” என்ற சிறார் நாவலுக்காக அவ்விருது வழங்கப்படவுள்ளது. திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தில் பிறந்த சரவணன், வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

விஷ்ணுபுரம் சரவணனுக்கு வாழ்த்து கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக #SahityaAkademi-யின் #BalSahityaPuraskar பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என @tnschoolsedu-இன் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.


அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக #YuvaPuraskar பெறத் தேர்வாகி இருக்கும் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினைப் பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.