பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு- விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முக்கிய தகவல்

 
விஷால் செய்த சம்பவம்... இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்... விஷால் செய்த சம்பவம்... இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்...

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்  அடுத்த கட்ட வாக்குப்பதிவு மற்றும் 14 ஆம் தேதி முடிவுகளை எதிர்நோக்குகிறோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நவ.11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்


இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில், “BiharElections2025 இல் முதல் கட்ட வாக்குப்பதிவின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். இதுவரை 3.4 கோடி வாக்காளர்களிடமிருந்து 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் முறையாக வாக்காளர்கள் பலர் வாக்களித்துள்ளனர். மேலும் 122க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர் களத்தில் உள்ளனர். பீகாரின் எதிர்காலத்திற்கு இந்த போர் வலுவாகவும் மிகவும் முக்கியமானதாகவும் தெரிகிறது. சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும். அடுத்த கட்ட வாக்குப்பதிவு மற்றும் 14 ஆம் தேதி முடிவுகளை எதிர்நோக்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.