“உதயநிதி பேசினது தப்பு அதனால்தான் போலீஸ் கைது பண்ணாங்க”- விஷால்

 
s

நடிகர் சங்க கல்வெட்டில் 100 ஆண்டுக்கு உங்கள் பெயர் நிலைத்திருக்கும் என முதல்வர் விஜய் குறித்து விஷால் நெகிழ்ச்சி கூறியுள்ளார்.

விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படம் குறித்தான நேர்காணலில் பேசிய விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யார் யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் முதலமைச்சரும் எங்கள் நடிகர் சங்க உறுப்பினருமான விஜய்தான் 100 ஆண்டுகள் இருக்கப் போகிற கட்டடத்தை திறந்துவைக்கப் போகிறார். முதலமைச்சர் "C. Joseph Vijay" என்ற பெயர், இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறாக நிலைத்திருக்கும். 32 வருடம் விசில் அடித்து நான் ரசித்த ஆள் இன்று தமிழ்நாடு முதல்வர் விஜய் அண்ணா. நான் அவரை Darling என்று தான் கூப்பிடுவேன். உதயநிதி பேசினது தப்பு அதனால்தான் போலீஸ் கைது பண்ணாங்க” என்றார்.