அன்பு பவதா, உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் - நடிகர் விஷால் உருக்கம்!

 
vishal 34

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.  பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், பவதாரணி மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு பவதா, நான் இதை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். உங்களை இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ பார்த்தை விட, என்னுடைய சொந்த சகோதரி போலவே எண்ணினேன். உங்களை போன்ற ஒரு நல்ல ஆத்மா எங்களை விட்டு வெகு சீக்கிரமாக பிரிந்துவிட்டது. கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன். இது வாழ்க்கை மீதான என் தவறான புரிதலை உணர்த்துகிறது. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.