சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பிய எம்.எல்.ஏவுக்கு கொரோனா

 
mla

விருதுநகர் தொகுதி திமுக சட்டமன்ற  உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus Tamil Nadu new cases: Three more test positive for coronavirus  in Tamil Nadu; Tally goes up to 15 - The Economic Times

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு பல்வேறு நடிகர், நடிகைகளும், அரசியல் தலைவர்களும் இலக்காகி வருகின்றனர்.

அந்தவகையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டார்.  சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு திரும்பிய நிலையில் உடல்நல பாதிப்பு இருந்தது.இந்நிலையில் இன்று பரிசோதனை முடிவில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.