“அண்ணே அடிக்காதீங்க..” - சிறுவனை பீடி குடிக்க சொல்லி கொடூர தாக்குதல்
விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரில் சிறுவர்களை வேறு சில சிறுவர்கள் சிலர் சேர்ந்து பீடியை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி காலால் எட்டி உதைத்தும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புள்ள நாயக்கனூர். அங்குள்ள தோட்ட பகுதியில் சில சிறுவர்கள் சேர்ந்து இரண்டு சிறுவர்களை பீடி குடிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.
அவர்கள் அதனை மறுத்து தலைவலிப்பதாக அழுகின்றனர். இதனையடுத்து அவர்களை காலால் எட்டி உதைத்து கட்டாயப்படுத்தி பீடி குடிக்கச் செய்கின்றனர். இதனை அருகில் இருந்த யாரோ ஒருவர் படம் பிடித்துள்ளார்.
அண்ணே அடிக்காதீங்க..! - சிறுவனை பீடி குடிக்க சொல்லி கொடூர தாக்குதல் 😲
— Poongodi Suganth (Modi Ka Parivar) (@PoongodiSugandh) December 17, 2025
திமுக ஏவல் துறை எங்கு உறங்கி கொண்டிருக்கிறது ? 😏 pic.twitter.com/1BxDn3GWZj
அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடித்த சிறுவர்கள் பீடி குடிப்பதை அவர்களின் வீட்டில் இந்த சிறுவர்கள் சொல்லியதாகவும் அதனால் ஆத்திரமடைந்து இச்சிறுவர்களை கட்டாயப்படுத்தி பீடி குடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.


