#BREAKING விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் பள்ளிக்கு இன்று(டிச,8) மதியம் 12.30 மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் மின்னஞ்சல் மற்றும் பள்ளிக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு துணை ஆய்வாளர் ஆதவன் தலைமையில் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வெற்றி வெடிகுண்டு சோதனை மேற்கொண்டது இதில் வெடிகுண்டு, வெடிக்கும் பொருட்கள் இல்லாத நிலையில் வெறும் புரளி என்று தெரிய வந்தது புறப்படும் நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த தகவல் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து இலுப்பூர் செளராஸ்ட்டிரா வீதியில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டுக்கு விரைந்தனர்.அங்கும் வெடிபொருட்கள் ஏதும் சிக்காததால் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதுபோல மெயில் மூலம் மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


