வரும் 9 மற்றும் 16-ம் தேதிகளில் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து..!

 
1

ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி 9-ம் தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

9-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. 

எனவே 9-ம் தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 16-ம் தேதியும் 2 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.