கார் ஓட்டியதில் விதிமீறல் - டிடிஎப் வாசன் கைது

 
ggg

யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.இதுதொடர்பான வீடியோவை  Tniw Throttl ers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். 

ttf

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . 

ttf
மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால், டிடிஎப் வாசனின் இருசக்கர வாகன உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  கார் ஓட்டுவதற்கு LLR விண்ணப்பித்த டிடிஎப் வாசன், செல்போனில் பேசியபடி காரை கவனக்குறைவாக ஓட்டியதால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.