விதிமீறிய ஆம்னி பேருந்துகள் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தீபாவளி பண்டிகை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6,699 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,223 ஆம்னி பேருந்துகள் பல்வேறு வீதி மீறலில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் 6,699 பேருந்துகளில் ஆய்வு செய்ததில் 1223 பேருந்துகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு T18,76,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறையாக வரி செலுத்தாத ஆம்னி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.11,25,180 வரி வசூல். விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.