“சாரி மோடிஜி... வெற்றி பெற முடியவில்லை!”- பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்

 
vinoj p selvam modi

வெற்றி பெற முடியாததற்கு, மன்னித்து விடுங்கள் மோடிஜி... மாற்றம் வெகு தொலைவில் இல்லை என மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் படுதோல்வி அடைந்தார்.


இந்நிலையில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி பெற முடியாததற்கு, மன்னித்து விடுங்கள் மோடிஜி... உங்களை தலை குனிய வச்சிட்டேன். தொடர்ந்து போராடி உங்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன். மாற்றம் வெகு தொலைவில் இல்லை. எதிராக நம்பகமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம். மத்திய சென்னை தொகுதியில் பட்டத்து இளவரசர் உதயநிதியின் தொகுதியும், அமைச்சர் சேகர்பாபுவின் சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. ஆனால், அவர்களையும் மீறி நாம் ஒரு நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறோம். மத்திய சென்னையில் பல்வேறு அச்சுறுத்தல்களை மீறி தேர்தல் பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.