திமுகவின் கலை பிரிவு செயலாளராக பொறுப்பேற்று இருக்கலாம் விஜய் - வினோஜ் பி.செல்வம் விமர்சனம்

 
vinoj p selvam

தனிக் கட்சி தொடங்கியதற்கு பதிலாக, திமுகவின் கலைப் பிரிவு செயலாளராக பொறுப்பேற்று இருக்கலாம் விஜய் என  பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றனர்.  தமிழக வெற்றி கழக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  


இந்த நிலையில், தவெக பொதுக்குழு கூட்டத்தை பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் மாநாடு நடத்தியபோதும் சரி,முதலாவது பொதுக்குழு கூட்டத்திலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் புனைவு கதைகளை வாங்கிச் சென்று தீர்மானங்களாக வாசிக்கிறது தமிழக வெற்றி கழகம். தனிக் கட்சி தொடங்கியதற்கு பதிலாக, திமுகவின் கலைப் பிரிவு செயலாளராக பொறுப்பேற்று இருக்கலாம் விஜய் என குறிப்பிட்டுள்ளார்.