“துரோகின்னு தெரிந்த பிறகு எப்படி மன்னிக்க முடியுமா? எல்லாமே அதிமுக போட்ட பிச்சை”- ஓபிஎஸை விளாசிய விந்தியா
துரோகின்னு தெரிந்த பிறகு எப்படி மன்னிக்க முடியுமா? என ஓபிஎஸை அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விந்தியா, “2025-ல் பிரேமலதா அவர்களுக்கு எம்.பி. சீட் தராதது ஏன் தெரியுமா..? திருவிழா காலங்களில் ஊர் ஊரா போய் கடை போடுபவர்கள் மாதிரி தேர்தல்னு வந்துட்டா கட்சிய தூக்கிட்டு போய் ஒவ்வொரு கட்சிகளிடமும் பேரம் பேசுபவர் பிரேமலதா... 0.5% ஓட்டு இல்லாத தேமுதிகவை, திமுக அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பது கேவலம்.எடப்பாடியார் ஒரு தீர்க்கதரிசி... துரோகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று எத்தனையோ பேர் எடப்பாடியிடம் வந்து சொன்னார்கள்.. இரட்டை இலையை முடக்க பார்த்தாங்க.. கோர்ட்டு கோர்ட்டா போனாங்க.. ஆனால் அண்ணன் அசரவே இல்லை.. அவங்க இறங்கி அடிச்சா அண்ணன் ஏறி அடித்தார். துரோகின்னு தெரிந்த பிறகு எப்படி மன்னிக்க முடியுமா?
0.5% ஓட்டு இல்லாத கட்சிய, அதிக விலை கொடுத்து வாங்கிய கேவலம் 🔥🔥
— Pavithran RM- SayYesToWomenSafe&AIADMK (@PavithranRm) March 5, 2026
வெளுத்து விட்ட அக்கா விந்தியா ❤️🔥@AIADMKOfficial @AIADMKITWINGOFL pic.twitter.com/5QeTgUvpLj
ஓபிஎஸ் காரில் இருந்த அம்மா புகைப்படத்தை எடுத்து விட்டார்.. கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார்.. ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது.. இதெல்லாம் ஜெயலலிதா மற்றும் அதிமுக போட்ட பிச்சை” என்றார்.

