"நம் எண்ணங்கள் நிறைவேற முழுமுதற்கடவுளை வணங்குவோம்" - ஜி.கே.வாசன்

விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி ஜி.கே.வாசன் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவரும் முழுமுதற்கடவுளாக வணங்கும் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளை "விநாயகர் சதுர்த்தியாக" மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.எந்த காரியத்தை துவங்கினாலும் விநாயகர் பெருமானை வணங்கிவிட்டு துவங்கினால் அவை வெற்றிபெரும் என்பது அனைவரின் நம்பிக்கை.
விநாயகர் புதிய தொடக்கத்தின் கடவுள் மற்றும் தடைகளை நீங்குபவர், ஞானத்தின், அறிவின் கடவுளாக எல்லோரின் வாழ்வில் நீங்கமற நிறைந்திருப்பவர்.இந்நன்னாளில் நம் எண்ணங்கள் நிறைவேற முழுமுதற் கடவுளை வணங்குவோம். நாடும், நாட்டு மக்களும் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருள்புரிய, அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.