விநாயகர் சதுர்த்தி - கோயில்களில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளான விநாயகனை அவரது பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி என்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். அறிவு ,ஞானம், கல்வி ஆகியவற்றை கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் எடுத்தாலும், விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து மூன்று நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கம். வட மாநிலங்களில் நாளை முதல் 28ஆம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கணேச உத்சவ் என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டர்.