"விடுதலைப் போருக்கு வித்திட்ட பண்டிகை விநாயகர் சதுர்த்தி" - அண்ணாமலை வாழ்த்து!

 
tn

பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

annamalai

விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "தொட்டன எல்லாம் துலங்கச் செய்யும், தும்பிக்கை நாயகனின், துங்கக் கரிமுகத்து தூமணியின், விநாயகர் சதுர்த்தி விழா, பண்டிகைகளுக்கு எல்லாம் தொடக்க விழா.பிள்ளையாரில் தொடங்கி அனுமன் ஜெயந்தி வரை தொடரும் விழாக்களை எல்லாம்தான், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று வழக்கு தமிழிலே, ஒரு சொல்லாடல் பேசப்படுகிறது.

ttn

அருமையான தமிழில், ஔவைத் தமிழ் மூதாட்டி அருளிச் செய்த, விநாயகர் அகவலின் தொடக்கமே, செந்தாமரை மலர்ப்பாதம் கொண்ட கணபதியே என்றுதான் தொடங்குகிறது.சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட… எனத் தொடங்கும் விநாயகர் அகவல், தனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா எனக் கேட்ட ஔவையார் தமிழுக்கு செய்த காப்பு.

tn

நம் தேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்ட பண்டிகை விநாயகர் சதுர்த்தி. ஆங்கிலேயர் கண்களை மறைத்து, மக்களைத் திரட்ட, சுதந்திர வேட்கை வளர்க்க, நம் பாலகங்காதர திலகர், விநாயகர் விழாவை பயன்படுத்தியது வரலாறு.புதிய தொடக்கத்தை, புதிய உற்சாகத்தை, புதிய மலர்ச்சியை, புதிய எழுச்சியை, நமக்கெல்லாம் விநாயகர் அருளட்டும். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கி, நல்வாழ்வு பெற்று இன்புற்று வாழ இறையருள்புரிய வேண்டி விநாயகரை நான் பிரார்த்தனை செய்கிறேன்.அனைவருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.