“நாம் தமிழர் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”... மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்

 
ச் ச்

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

Image

விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளராக செஞ்சி பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்து நாம் தமிழர் கட்சிக்காக தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்த இவருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி தொகுதி வேட்பாளராகவும் சீமான் வாய்ப்பளித்தார்.

இந்நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர், திடீரென முகநூலில் நாம் தமிழர்  கட்சியில்  உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் உழைப்பை மற்றும் பெற்றுக் கொண்டு எந்தவித ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக கட்சித் தலைவர் சீமான் செயல்படுவதாக வேதனை தெரிவித்து பதிவிட்ட  முகநூல் பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் கட்சியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, என்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் கூறியது வருத்தமளிப்பதாகவும் சுகுமார் கூறியுள்ளார்.