நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாணவன் சாதனை

 
neet

நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்த விழுப்புரம் மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நீட் தேர்வு

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரயில்வே அதிகாரியான பிரபாகரன் மற்றும் கல்லூரி பேராசிரியையின் தம்பதியின் மகனான ரஜநீஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டத்தை பெருமைபட செய்துள்ளான். நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்ததையடுத்து ரஜநீஷ்க்கு அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர்.

சிறு வயதிலிருந்து ரஜநீஷ் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ள அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று அதிக முழு மதிபெண் எடுத்துள்ளதாக ரஜநீஷ் தெரிவித்துள்ளார். மருத்துவத்தில் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் அதிகமாக பயிற்சி மேற்கொண்டதால் அதற்கான பலன் கிடைத்துள்ளதாகவும் ரஜநீஷ் கூறியுள்ளார். மாக் டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என நீட் தேர்வில் முதல் மதிபெண் எடுத்த மாணவன் ரஜநீஷ் கூறியுள்ளார்.