விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

 
suspend

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்றும் 3 பேர் உயிரிழந்தனர்  கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டு காவல் ஆய்வாளர்கள் ஏற்கனவே பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.