விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

 
விழுப்புரம்

தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதி உட்பட, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இன்றுடன் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம்! Exemption of election  code of conduct in Tamil Nadu today!

கடந்த ஜூன் 10-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அப்போதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் வருவதால், அந்த மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசின் செயல்பாடுகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மாநில தலைமைச்செயலர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மக்களவை தொகுதி, சட்டப்பேரவை தொகுதிகளின் உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து, தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் நிதி ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டப் பணிகள் தொடரும் நிலையில், பணி உத்தரவு வழங்கப்பட்டு இன்னும் புதிய பணிகள் தொடங்கவில்லை என்றால் அப்பணிகளை செய்ய இயலாது. தேர்தல் முடிந்த பின் பணிகளை தொடங்கலாம். முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை, பணியில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கலாம். ஒரு திட்டப்பணிக்கு ஒப்புதல் மற்றும் நிதி அளித்து, அதற்கான பொருட்கள் வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அப்பணியை செயல்படுத்தலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..! –  News18 தமிழ்

மத்திய, மாநில அமைச்சர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிக்கு தேர்தல் பணியுடன் கூடிய அரசுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது. நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தனிப்பட்ட பயணம் மேற்கொள்ள மட்டுமே அனுமதியுண்டு. அமைச்சர்கள் அரசுப்பணியாக அந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி வழியாக செல்லலாம். ஆனால், அரசியல் ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதியில்லை. எந்த ஒரு மாவட்ட அதிகாரியும் அமைச்சர்களை அரசு ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அழைக்க க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.