வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு
சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பிரதான போட்டியாக களம் காணும் தொகுதிகளில் ஒன்றாக வில்லிவாக்கம் மாறியிருக்கிறது. இங்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் காண்கிறார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராவார். அண்மையில் கார்த்திக் மோகனுக்காக சபரீசனே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தார். அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் போட்டியிடுகிறார். எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் மூன்று பேரும் தங்களது பலத்தை காட்டும் விதமாக பரபரப்பாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
வில்லிவாக்கம் மேற்கு பகுதி 94-வது அ வட்டத்தில், இன்று (09.04.2026) பாரதி நகர், மோப்பிலியம்மன் கோயில் தெரு மற்றும் ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினேன்.
— Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Karthikmohandmk) April 9, 2026
அனைவரையும் உள்ளடக்கிய நமது கழக அரசின் சிறப்பான திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு… pic.twitter.com/BySLO8FOvo
அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக கார்த்திக் மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வில்லிவாக்கம் மேற்கு பகுதி 94-வது அ வட்டத்தில், இன்று (09.04.2026) பாரதி நகர், மோப்பிலியம்மன் கோயில் தெரு மற்றும் ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினேன். அனைவரையும் உள்ளடக்கிய நமது கழக அரசின் சிறப்பான திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தபோது, மக்களின் முகங்களில் தெரிந்த மலர்ச்சியும் அமோக வரவேற்பும் நமது வெற்றியை முன்கூட்டியே உறுதிசெய்கின்றன. சிறப்பான மக்கள் பணி தொடர்ந்து நடைபெற, வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எனக்கு உங்களின் முழுமையான ஆதரவைத் தாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



