விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் வெட்டிக்கொலை

 
murder

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரது மனைவி சின்னமணி. கணவர் வைரமுத்து இறந்து விட்டதால் புதுக்கோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் சின்னமணி. வைரமுத்துவின் சகோதரர் ராஜேஷ் கண்ணன்  மற்றும் சின்னமணி இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சின்னமணி திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் ராஜேஷ் கண்ணன் குற்றம் சாட்டி வந்துள்ளார். 


இந்த நிலையில், எப்போதும் வென்றான் பகுதியில் சின்னமணி பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேஷ் கண்ணா சின்னமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த அரிவாளால் சின்னமணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சொத்து பிரச்சினை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல்

 வெளியாகியுள்ளது.