விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை... போலீசார் - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு

 
ச்

தமிழகத்தில் அறுபது கிலோமீட்டருக்கு இடையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிட வலியுறுத்தி விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை காவல் துறை அனுமதியின்றி முற்றுகையிட்ட புரட்சி பாரதம் கட்சியினரை போலீசார் வலுகட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிற நிலையில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும், அறுபது கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை நீக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். முற்றுகைபோராட்டத்திற்கு போலீசார் அனுமதி தராத நிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்த புரட்சி பாரதம் கட்சியினரை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தததால் போலீசாருடன் வாக்கு வாதம் செய்தனர்.


போலீசாரின் பாதுகாப்பினை மீறியும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முன்பாக அமர்ந்தும், படுத்தும் முற்றுகையிட்டதால் உடனடியாக புரட்சி பாரதம் கட்சியினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் சுங்கச்சாவடிகளை திரும்ப பெறக்கோரியும், அனுமதி தராத போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.