விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு!

 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரம் கோளாறு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மொத்தமாக 2,37 031 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 276 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று வாக்களித்து வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.


இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குகள் பதிவான நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.52 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறையை கண்டித்து பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூத் சிலிப் வழங்கி கொண்டிருந்த பாமகவினரை காவல்துறையினர் வெளியேற சொன்னதால் சர்ச்சை வெடித்தது.மற்ற கட்சியினரை அகற்றாமல் தங்களை மட்டும் வெளியேற்றுவதாகவும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாமகவினர் வாக்குவாதம் செய்தனர்.