குரங்குடன் விக்ரம் வெளியிட்ட வீடியோ- வனத்துறை விசாரணை
அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கான ‘லார் கிப்பன்’ குட்டியை வீட்டில் அடைத்து வைத்து வளர்த்து வருவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடிகர் விக்ரம், அரியவகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அக்கரையில் உள்ள மு.க.முத்து வீட்டில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். விக்ரம், மு.க.முத்து வீட்டிற்கு சென்றபோது சிலர் உரிய ஆவணங்களுடன் குரங்கை விற்க வந்துள்ளனர். விற்பனைக்கு எடுத்து வந்தபோது விக்ரம் வீடியோ எடுத்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
.

