பெரும் சோகம்...! பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாங்க்யில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் லியோ லட்சுமி என்ற மூன்றரை வயது குழந்தை கல்வி பயின்று வந்தது. லியோ லட்சுமி பள்ளியில் விளையாடி கொண்டிருந்த போது, அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி மீது ஏறியுள்ளது. அப்போது அந்த தொட்டியின் இரும்பு மூடி திடீரென உடைந்ததில் அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.