விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பெண் தொண்டர் வேண்டுதல்..!

 
1 1

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று (டிச.9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த ஒரு தவெக பெண் தொண்டர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும் விஜய் அண்ணா முதல்-அமைச்சராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும்தவெக பெண் தொண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடியை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.