தவெக-வின் அடுத்தகட்ட பிளான் இதுதான்! - வெளியான முக்கிய தகவல்!

 
Vijay tvk

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பிரச்சனைகள் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். 2026ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே தனது இலக்கு அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தனது கட்சியில் பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து, கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் தொடர்பாக கட்சி தலைமை மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அதன்படி மாவட்டத்திலுள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பிரச்சனைகள் குறித்து போராட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து கடலூரில் போராட்ட நடைபெறவுள்ள நிலையில், இதில் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தேர்தல் பணிகளையும் விரைவுபடுத்தியுள்ளது தமிழக வெற்றிக்கழகம். மாவட்ட அளவில் பூத் கமிட்டிகள் இறுதி செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மே மாதத்திற்குள் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.