விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் - அண்ணாமலை

 
annamalai

திமுக சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுப்பது போல் உள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

Annamalai

 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம்  நீட் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  நீட்  குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராக தான் உள்ளது.  நீட் தேர்வு எதிர்ப்பவர்கள் அதற்கான புள்ளி விவரங்களை வைத்து பேசினால் நன்றாக இருக்கும் . 

tt

திமுக சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுத்தால் சந்தோஷம்.  திமுக சார்ந்த கொள்கையுடன் விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும். நீட் தொடர்பாக இன்னும் பல தரவுகளை வைத்துக்கொண்டு விஜய் பேசினால் நல்லது என்றார்.