திமுகவுக்கு எதிராக விஜய்யின் 'ஸ்மார்ட்' பிளான்..!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமர்பித்தார். இதனை தொடர்ந்து பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளேன். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். நமது வீட்டு வாசலில் இருந்து அம்மாவிடம் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக எண்ணி பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன்.
தீயசக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என பெரம்பூர் பிரசாரத்தில் பேசிய விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை என்ற அவர், முதியவர்களுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். மேலும், 5 வருடங்களாக திமுக ஆட்சி நடத்தினார்களா அல்லது வேற எதாவது நடத்தினார்களா எனவும் சாடியுள்ளார்.
டீ கடையில நிம்மதியா டீயை குடிக்க முடியறதுல்ல. போதையை போட்டுட்டு வந்து வெட்டிட்டு போய்டுறானுங்க.. இது என்ன நாடா இல்ல காடா..? இங்க கவர்மெண்ட் ஒன்னு இருக்கா இல்லையா ? ஒரு அடிப்படை பாதுகாப்பு கொடுக்க முடியலென எதுக்கு இந்த ஆட்சி..? எதுக்கு இந்த அதிகாரம். ஸ்டாலின் சார்க்கு மக்கள் எல்லாம் முக்கியமே கிடையாது அவருக்கு குடும்பத்துடன் கொள்ளை அடிக்கிறது தான் ரொம்ப முக்கியம். 5 வருடம் காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார் ஒரு அடிப்படை பாதுகாப்டையாவது கொடுத்திருப்பாரா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடி ஊழல்…நகராட்சித் துறையில் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நமது குழந்தைகள் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தருகிறார்கள்..
உங்களுக்காக உங்க விஜய் வசதியான வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நிற்கிறேன். எனத் தெரிவித்தார்.
திமுக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களது காதில் விசில் ஊதி அனுப்புங்கள். திமுக கொடுக்கும் பணத்தை வாங்காமல் விடாதீர். வாங்கிக் கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். எப்படி Smart ஆக கொள்ளையடித்து ஏமாற்றினார்களோ அப்படி நாமும் Smart ஆக விசில் ஊதி அனுப்புவோம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், உங்களுக்கான தேர்தல், மறக்காமல் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
4 முனைப் போட்டி, 40 முனைப் போட்டி என உருட்டினாலும் இரண்டு முனைப் போட்டி தான். ஒன்று TVK, இன்னொன்று DMK, எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி பரப்புரையை முடித்தார்.

