அரசுப் பள்ளியில் விஜயின் நிகழ்ச்சி ஒளிபரப்பு

 
அரசுப் பள்ளியில் விஜயின் நிகழ்ச்சி ஒளிபரப்பு

கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது, அரசு பள்ளி ஒன்றின் ஸ்மார்ட் வகுப்பறையில் ஒளிபரப்பட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஒளிபரப்பிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் ஒளிப்பரப்பப்பட்டதா முதல்வர் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி?  என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. அந்த வீடியோவில் இருப்பது எந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே தவெகவினர் அரசுப் பள்ளிக்கு சென்று அரசியல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுபோன்ற செயல் மாணவர்களின்  எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.