இன்று நடைபெறவிருந்த விஜயின் சைதாப்பேட்டை பரப்புரை ரத்து: காரணம் என்ன தெரியுமா ?
சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய் கிழமை விஜய் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அந்நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசிடம் அனுமதி கோரி த.வெ.க-வினர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, விஜய் பிரச்சாரத்திற்கு ஞாயிற்றுக் கிழமை இரவு போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், வில்லிவாக்கத்தில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரச்சாரம் செய்து முடிக்கும் படியும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் செய்வும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இந்த நேரத்தில் விஜய் பிரச்சாரம் செய்து முடிக்க முடியாது என்பதால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
அதே போல் இன்று சைதாப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறையிடம் தவெக தரப்பு அனுமதி கேட்ட நிலையில், அங்கு 1 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியதாக தகவல் வெளியானது.அதனால் வழங்கப்பட்ட நேரம் பிரச்சாரம் செய்ய போதுமானதாக இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும், த.வெ.க கட்சி நிர்வாகம் தரப்பிலேயே இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

