விஜய்யின் அடுத்த டார்கெட் திருச்சி தான்! திமுக மாநாட்டிற்குப் பின் தவெக காட்டும் அதிரடி!

 
vijay

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை நடத்தினார். அதைத் தொடர்ந்து மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தவெக தரப்பில் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் திருச்சியில் இந்த மாத இறுதியில் 3வது மாநில மாநாட்டை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதையொட்டி திருச்சியில் 3வது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 9ஆம் தேதி திருச்சியில் திமுகவின் 12வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் தவெகவும் திருச்சியில் மூன்றாவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியாகவுள்ள தகவல் பெரும் கவனம் பெற்றுள்ளது.