எம்எல்ஏவாக பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ்

 
s

எம்எல்ஏக்களாக பதவியேற்றனர் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Image

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா ஆகிய இருவரும் இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

பதவியேற்ற கையோடு இருவரும் நேராக தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் விஜயை நேரில் சந்தித்தனர். முதல்வர் விஜய் இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் விஜய் உற்சாகமாக காணப்பட்டதாகவும், "இது வெறும் ஆரம்பம் தான்  என்று நம்பிக்கையுடன் கூறியதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.